Wednesday, April 14, 2010
அமீரகத்தின் `சிறந்த தமிழ்ப்பெண்மணி-2010`
அமீரகத் தமிழ் மன்றம் அமீரகத்தில் முதன் முறையாகப் பெண்கள் மட்டுமே மேடையில் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சியைக் கொண்டாடவிருக்கிறது
வரும் 23ஆம் தேதி துபாய் உயர் தொழில்நுட்பப் பெண்கள் கல்லூரியில் அரங்கேறவிருக்கும் இந்தப் பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு அனைவரையும் அமீரகத் தமிழ் மன்றம் அன்புடன் அழைக்கிறது
விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகையும் பாடலாசிரியையுமான ரோஹினி கலந்து கொள்ளவிருக்கும் இவ்விழாவில் அமீரகத்தில் இருந்து கொண்டு சமூகத்திற்குத் தொண்டாற்றும் சிறந்த மகளிரை அடையாளம் கண்டு அவர்களுக்கு அமீரகத்தின் `சிறந்த தமிழ்ப்பெண்மணி-2010` விருது வழங்கும் நிகழ்ச்சியும் அரங்கேறவிருக்கிறது இதற்காக அமீரகத்தில் சமூகத் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் நான்கு பெண்மணிகளை அமீரகத் தமிழ் மன்றம் அடையாளம் கண்டிருக்கிறது வாக்களிப்பு மூலமாகவும், நடுவர் குழு மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த பெண்மணி விழாவின் போது சிறப்பிக்கப்படுவார்
உங்கள் வாக்குகளை அமீரகத் தமிழ் மன்றத்தின் வலைத்தளத்திற்குச் சென்று வழங்குங்கள். அமீரகத்தில் சமூகத் தொண்டாற்றி வரும் பெண்களை உற்சாகப்படுத்துங்கள்.
அமீரகத் தமிழ் மன்றம்
Subscribe to:
Post Comments (Atom)


1 comment:
இணையத்தளங்களில் தமிழை எழிய முறையில் எழுத தங்கள் அனைவருக்கும் உதவிய யூனிகோட் உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தியை இங்கே சென்று பாருங்கள், http://thaj77deen.blogspot.com/2010/04/blog-post_14.html
Post a Comment